கோவை புதூரை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 23 )இவர் சாய்பாபா காலனி, கணபதிலே அவுட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கடையை பூட்டி விட்டு பொங்கல் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று சென்று பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பணம் ரூ.10 ஆயிரம், செல்போன் ஆகியவற்றை யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுபோல பி.என்.புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் .இவரது மனைவி சங்கீதா ( வயது 36) இவர் இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் ரோடு பூம்புகார் நகரில் உள்ள பியூட்டி அகாடமியில் 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி பியூட்டி பார்லரை பூட்டிவிட்டு பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு சென்று விட்டார் .நேற்று வந்து பார்த்தபோது பியூட்டி பார்லரின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே பீரோவில் இருந்த ரூ.5.300 பணம், ஹேர் டிரையர் உட்பட அழகு சாதன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது . இது குறித்து சங்கீதா கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோலபீளமேடு, சின்னியம்பாளையம் ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் கிருபாகரன் . இவர் சின்னியம்பாளையத்தில் செருப்பு கடை நடத்தி வருகிறார். இவரும் கடந்த 13ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது . உள்ளே வைத்திருந்த ரூ . 12 ஆயிரத்தை காணவில்லை. யரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து கிருபாகரன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..