கோவை தடாகம் அருகே உள்ள மாங்கரை செக் போஸ்ட் பகுதியில் தடாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினார். அப்போது 2 பேர் கையில் பையுடன் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் போலீசை பார்த்ததும் பையை கிழே போட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். அந்தப் பையில் 20 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன..தப்பிய ஒடிய 2 பேரை தடாகம் போலீசார் தேடி வருகிறார்கள்.