கோவைக்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக அறை குறையாக பணிகளை செய்து வந்தாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்து உள்ளார். இன்று ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் நடைபெறும் தி.மு.க பொதுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் கோவை வருகையையொட்டி, முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. முதலமைச்சர் பயணிக்க உள்ள சாலைகளை செப்பனிடுதல், தூய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் ராமநாதபுரம் – போத்தனூர் சாலையில் மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்கான சீரமைப்பு பணிகளை செய்ததாக புகார் எழுந்துள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின் செல்லும் அச்சாலையில் ஒரு பக்கம் மட்டுமே, சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் கண் பார்வையில் படும் ஒரு பக்கம் மட்டுமே வண்ணம் பூசப்பட்டுள்ளதாகவும், மறுபக்கம் வண்ணம் பூசப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகம் முதலமைச்சர் வருகைக்காக கண் துடைப்பிற்காக இப்பணிகளை செய்துள்ளதாகவும், முழுமையாக பணிகளை செய்யாமல் அறையும், குறையுமாக அவசர கதியில் செய்துள்ளதாகவும் புகார் எழுதுள்ளது..