ஓணம் பண்டிகை… கேரளாவில் 12 நாட்களில் ரூ.818 கோடிக்கு மது விற்பனை.!!

திருவனந்தபுரம்: கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, செப்டம்பர், 6ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 12 நாட்களில் மட்டும், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் ஓணம் திருவிழா புகழ் பெற்ற ஒன்று.
கேரள மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். இந்நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகையின் எதிரொலியாக மதுபானங்கள் விற்பனை எப்படி உள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. இந்தாண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கடந்த செப்டம்பர், 6ம் தேதி முதல் 17ம் தேதி வரை, 818.21 கோடி ரூபாய் மது விற்பனையாகி, சாதனை படைத்துள்ளது. கடந்தாண்டு இதன் விற்பனை ரூ.116 கோடியாக இருந்தது.

இந்தாண்டு ஒன்பது நாட்களில், ரூ.701 கோடிக்கு மது விற்பனையானது. கடந்த ஆண்டு இதே காலத்தில் விற்பனை செய்யப்பட்ட ரூ.715 கோடியை விட சற்று குறைவாகவே விற்பனையாகியுள்ளது. இருப்பினும் அடுத்த 3 நாட்களில் விற்பனை சூடுபிடித்தது. இதனால், இதுவரை இல்லாத வகையில், 818.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனைக்கு காரணம் என கருதப்படுகிறது. கேரளாவில் சேட்டன்கள் கொண்டாட்டம் என்றாலே, பார்ட்டி வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்துவார்கள்.