கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் எஸ்டேட் மேலாளர் குடியிருப்புப் பணிக்கு நேற்று காலை சென்ற லட்சுமணன் வயது 58 என்பவரை அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார் . உடனே உருளிக்கல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் வில்லோனி எஸ்டேட் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
வால்பாறை அருகே கரடி தாக்கி ஒருவர் காயம்..
