ஒருதலை காதல்… வாலிபர் தூக்கிட்டு தற்கொலை..

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள இக்கரை போளுவாம்பட்டி, சவுக்குகாடு பகுதியைச் சேர்ந்தவர் வீரன்.வன ஊழியர். இவரது மகன் அய்யாசாமி ( வயது 22 )இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம். அந்த பெண் இவரை காதலிக்க மறுத்துவிட்டார். இதனால் மனம் உடைந்த அய்யாசாமி நேற்று அங்குள்ள காட்டுப் பகுதியில் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தந்தை வீரன் ஆலந்துறை போலீசில் புகார் செய்தார்.போலீசார் விரைந்து சென்று பிணத்தை மீட்டு கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.