சென்னை: ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0-வில் இதுவரை கஞ்சா வியாபாரிகளின் 127 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா வியாபாரிகள் ரூ.8.83 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுளள்து. கடந்த 19 நாட்களில் 1811 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 1811 வியாபாரிகளிடம் இருந்து சுமார் 1,610 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.