திருமணத்தடை நீங்க குழந்தைகளுக்கு பாத பூஜை..!!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை சாலை முத்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் ஆடி 18 முன்னிட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு திருமணத்தடை நீங்க ஏழு குழந்தைகளை அமர வைத்து திருமணம் ஆகாதவர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்தனர் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வரம் கேட்டு கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்தனர் பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானத்தை சிறப்பித்தனர்.