2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது.
அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது.
மேலும் தமிழகத்தைச் சேர்ந்த கலைஞர் வேலு ஆசான், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருது வழங்கும் விழா இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்மபூஷன் விருதை அஜித் பெற உள்ளார்.