பஹல்காம் தாக்குதல்… சர்ச்சை வீடியோ பதிவிட்ட திருச்சி வாலிபர் கைது..!

காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா பதியிலோ பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த சம்வபம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் அவதூறாகவோ அல்லது பாகிஸ்தான் சார்பு பதிவுகளை இடுவார்கள் அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் வள்ளுவர் நகர் ஜின்னா தெருவை சேர்ந்த மன்சூர் அலி (வயது 26) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

திருச்சி மாநகர சைபர் கிரைம் பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ராஜசேகர். இவர் அந்த அலுவலகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பதிவுகளை பார்த்த கொண்டிருந்த போது, ஒரு ஐ.டி.யில் இருந்து வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்ததை அவர் பார்த்துள்ளார்.

அந்த வீடியோவில், ‘ஜம்மு-காஷ்மீரில் பாஜகவின் ஐ.டி. பிரிவின் பொறுப்பாளராக உள்ள தலித் ஹுசைன் ஷாவின் புகைப்படத்தை காட்டி, அவர் காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டார். மேலும் அவர் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பிற்காக பணியாற்றுகிறார்’ என்று மன்சூர் அலி கூறியிருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த போலீஸ் ஏட்டு ராஜசேகர் உடனடியாக மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், பாஜக பிரமுகரின் பெயர் மற்றும் புகைப்படத்தை காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் தொடர்புபடுத்தி தவறாக பதிவிட்டு இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையிலும், அரசாங்கத்தின் மீது வெறுப்பை உருவாக்கும் வகையிலும் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீடியோ மத அடிப்படையில் பகைமையை உருவாக்கும் என்றும், பொது அமைதியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டதால் மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து மன்சூர் அலியை கைது செய்துள்ளார்.