கோவை அருகே உள்ள பி .என். புதூரைசேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 35 )பெயிண்டர் இவர் சீர நாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு ஜிம்முக்கு அடிக்கடி செல்வார் .கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அதே ஜிம்முக்கு வந்த 3 பேரிடம் இவருக்கு தகராறு ஏற்பட்டது.இந்தமுன் விரோதம் காரணமாக நேற்று தினேஷ்குமார் அங்குள்ள ஒரு கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சீரநாயக்கன்பாளையம் ஜீவரத்தினம் வீதியைச் சேர்ந்த குல்கன் என்று தினேஷ் (வயது 24) சந்தோஷ் குமார் ( வயது 30 )பாலாஜி கார்டனை சேர்ந்த திலோத்தமன் ( வயது 21 )ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 3பேரும் சேர்ந்து தினேஷ் குமாரை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தினார்கள் இதில் தலையில்பலத்த காயம்ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து தினேஷ்குமார் ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் வழக்கு பதிவு செய்து குல்கன் என்றதினேஷ், சந்தோஷ் குமார், திலோத்தமன் ஆகியோரை கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.
பெயிண்டருக்கு கத்திக்குத்து – 3 பேர் கைது..!
