போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் (NCB), இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு (ATS) ஆகியோர் நேற்று இரவு இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றபோது படகை பிடித்தனர். படகில் இருந்த ஆறு பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் அரபிக்கடலில் ஏஜென்சிகள் நடத்திய இரண்டாவது பெரிய போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை இதுவாகும். பிப்ரவரி 26 அன்று, போர்பந்தர் கடற்கரையில் 3,300 கிலோ போதைப் பொருளுடன் ஐந்து வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது..