இறங்கி வந்த பாகிஸ்தான்?.. நடுநிலையான விசாரணைக்கு தயார் – பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு.!

ஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில் இந்தியாவின் நடவடிக்கையால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான், பஹல்காம் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று கூறியுள்ளது. இதனை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார்.

பஹல்காம் விவகாரத்தில் நடுநிலையான விசாரணைக்கு தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் கூறியுள்ளார். கைபர் பக்துன்க்வாவில் உள்ள ராணுவ அகடமியில் பட்டம் முடித்தவர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியதாவது:-

நம்பகமான விசாரணையில் பங்கெடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. சமீபத்தில் பஹல்காமில் நடைபெற்ற துயரம் பழி கூறும் போக்குக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பொறுப்பு மிக்க நாடாக, நடுநிலையான, வெளிப்படடையான நம்பகமான விசாரனைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.