கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், லூனா நகர், லிபர்டி கார்டனைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மகள் பிரியதர்ஷினி (வயது 20 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி ஐ.டி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவரிடம் காதல வைத்திருந்தாராம். இவர்களது காதல் பெற்றோர்களுக்கு தெரிய வந்தது. இதை தந்தை ரமேஷ் குமார் கண்டித்தார் . இதனால் மனம் உடைந்த பிரியதர்சினி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் படுக்கை அறையின் கதவை பூட்டிக் கொண்டு மின்விசிறியில் சுடிதார் துப்பட்டாவை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு… கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை..
