சிங்கப்பூரிலிருந்து போலி பாஸ்போட் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்த பயணி கைது..!

திருவாரூர் மாவட்டம் ,சேரன் குளம், மன்னார்குடியை சேர்ந்தவர் முருகேசன் ( வயது 48)இவர் நேற்று சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தார். கோவை விமான நிலையத்தில் இவரது பாஸ்போர்ட்டை குடியுரிமை பிரிவு அதிகாரி கிருஷ்ணா ஸ்ரீ சோதனை செய்தார். அதில் அவரது பிறந்தநாள் தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் மன்னார்குடியை சேர்ந்த பாஸ்போர்ட் ஏஜென்ட் ராகவன் மூலமாக போலீ பாஸ்போர்ட் தயாரித்து பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர் பீளமேடு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி இவரை கைது செய்தார். போலி பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..