ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் கோலாகலமாக நடந்தது . இக்குறை தீர்ப்பு முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் பொதுமக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்டறி ந்து 55 மனுக்களை பெற்றார். உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் தீர்வு காண உத்தரவு பிறப்பித்தார். இக்குறை தீர்க்கும் முகாமில் துணை ஆணையாளர்கள் போக்குவரத்து ஜெயலட்சுமி மத்திய குற்றப்பிரிவு பெருமாள் ஆவடி ஐமன் ஜமால் மாதவரம் பாலகிருஷ்ணன் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள் உட்பட அனைத்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இக்குறை தீர்க்கும் சிறப்பு முகாம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடத்தப்பட்டு பொது மக்களின் புகார் மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலமாக துரித விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்..
ஆவடியில் மக்கள் குறை கேட்பு முகாம் – குறைகளை கேட்டறிந்தார் போலீஸ் கமிஷனர் சங்கர்..!
