கோவை : தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் மற்றும் முற்போக்கு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் நேற்று கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:- நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில் கோவையில பல இடங்களில் இந்தி மொழியில் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் வட இந்திய ஒற்றுமை மன்றம் என்ற பெயரில் நீங்கள் அனைவரும் இம்முறை வட இந்திய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் சாதி, மத, பாகுபாடு இன்றி தேர்தலை எதிர்கொள்ளும் மக்களிடம் மத ரீதியாக பிளவுபடுத்தும் நோக்கிலும் ,சாதி இன மத பாகுபாடு இன்றி தேர்தலை எதிர்கொள்வோம் என்ற அரசின் தேர்தல் நோக்கத்திற்கு முரணாகவும் இந்த சுவரொட்டி உள்ளது. மேலும் கோவையை குஜராத்துடன் இணைப்போம் என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது. மக்களை பிளவுபடுத்தி குழப்பத்தையும் ஒற்றுமையும் சீர்குலைக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளை உடனே அகற்ற வேண்டும். மேலும் அதை ஒட்டிய நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது..
கோவையில் மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் சுவரொட்டிகள் அகற்ற கோரி போலீஸ் கமிஷனரிடம் தபெதிக மனு.!!
