கோவை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மாவட்டத்தில் 45 குழந்தைகள் காப்பகங்கள் உரிய அரசாங்க அனுமதி பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செய்து குழந்தைகளுக்கான மறுவாழ்வு மையங்களை சீரான முறையில் நடத்தி வருவதாகவும், இந்த நிலையில் சில காப்பகங்களில் சரியான முறையில் பராமரிக்க இல்லை என்று அரசு கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்தது ஒழுங்குபடுத்தியது , குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியும் டிசிபிஓ எப்பொழுதெல்லாம் நேரடியாக வருகை புரிகிறார்களோ அப்பொழுதெல்லாம் காப்பகங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய விஷயங்களை அறிவுறுத்துவார்கள் அதை உரிய காலத்தில் சரி செய்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம்.
இந்த நிலையில் கோவையில் உள்ள அனைத்து காப்பகங்களுமே ஏதோ தவறானவை என்கின்ற கருத்து ஏற்படும் வகையில் மிகத் தவறாக சித்தரித்து பொய்யான தகவல்களை பரப்புவோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தோம். எங்கள் குழந்தைகள் காப்பகங்கள் அரசின் வழிகாட்டுதல் படி உரிய பாதுகாப்பு வசதியுடன் செயல்படுத்திகிறோம் என்றனர்..