ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் அஞ்சலி வயது (45) அவர் மனுவில் கூறியதாவது :
நாங்கள் அருந்ததியர் சமூகத்தைச் மேலாக சார்ந்தவர்கள் வசித்து வரும் இடம் ஈரோடு மாநகராட்சி 5-வது வார்டு எல்லப்பாளையம் கிழக்குத் தெருவில் அரசுக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். மேற்படி வீட்டிற்கு தேவையான மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வீட்டு வரி போன்றவற்றை அரசுக்கு செலுத்தி வருகிறோம். அது மட்டும் இன்றி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள போன்றவற்றையும் வழங்கி உள்ளர்கள். நாங்கள் வசித்து வரும் அருகாமையில் உள்ள இடத்தை மாற்று சமுதாயத்தினருக்கு பத்துக்கும் மேற்கண்ட வீட்டிற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு இலவச பட்டா வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வசித்து வரும் சுமார் 6-க்கும்மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்கவில்லை. திடீரென 17.03.2023 அன்று உடனடியாக நீங்கள் அனைவரும் வீட்டை காலி செய்து தரவேண்டும் என மாநகராட்சி நிர்வாக ஊழியர்கள் எங்களை வற்புறுத்தி வருகிறார்கள். (எங்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் குழந்தைகளுடைய படிப்பு போன்றவற்றை இந்த பகுதியிலேயே இருந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இங்கே வசித்து விட்டு திடீரென காலி செய்ய சொன்னால் நாங்கள் எங்கே போவது குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு வசிக்கக்கூடியவர்களுக்கு மாவட்ட இலவச நிர்வாகம் பட்டா தலையிட்டு வழங்கியதைப் அருகில் போல எங்களுக்கும் இலவச பட்டா வழங்க வேண்டும் என பணிவண்போடு கேட்டுக் கொள்கிறோம். என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது