தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ,புதுக் குடியைச் சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 47) இவருக்கு 2 மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ராயர் பாளையத்தில் தங்கி இருந்து கிட்டாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை பார்த்து வந்தார் .இதே பெட்ரோல் பங்கில் காளிமுத்துவின் தம்பி நாராயணனும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் பெட்ரோல் பங்க் அருகே ஒரு தனியார் நிறுவனம் உள்ளது .இந்த நிறுவனத்துக்கு பொருட்கள் ஏற்ற தூத்துக்குடி யில்இருந்து நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு ஒரு லாரி வந்தது. அந்த லாரியை கோவில்பட்டியை சேர்ந்த மாரிமுத்து ( வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடியைசேர்ந்த சரவணகுமார் ( வயது 26) என்பவர் மாற்று டிரைவராக இருந்தார். கிட்டாம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு வந்ததும் அங்கிருந்து பெட்ரோல் பங்க் அருகேலாரியை நிறுத்த மாரிமுத்து முடிவு செய்தார் .அவர் லாரி அங்கு நிறுத்துவதற்காக திருப்ப முயன்றார். அப்போது அந்த லாரி பங்கில் பெட்ரோல் போடும் பம்பில் இடிப்பது போல்வந்தது. இதை பார்த்த பெட்ரோல் பங்க் காசாளர் மாரிமுத்து பார்த்து ஏன்? இப்படி வேகமாக லாரியை ஓட்டி வருகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதன்படி மாரிமுத்துவும் சரவணகுமாரும் பெட்ரோல் பங்கிலிருந்து சிறிது தூரம் சென்று லாரி நிறுத்தி ஓய்வு எடுத்தனர்.ஆனால் இரவு 12 மணிக்கு மேல் அந்த லாரி டிரைவர்களான மாரிமுத்து சரவணகுமார் மீண்டும் அந்த பெட்ரோல் பங்குக்கு வந்தனர். அவர்கள் கையில் இரும்பு கம்பி இருந்தது. அப்போது காளிமுத்து அங்குள்ள ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் காளிமுத்துவின் தம்பி நாராயணன் கழிவறைக்கு சென்று இருந்ததார். அவர்கள் இருவரு ஏண்டா ? எங்களிடமே தகராறு செய்கிறாயா? இப்போது பேசு பார்க்கலாம் என்று கூறினர் .மேலும் தங்கள் கையில் இருந்த இரும்பு கம்பியால் காளிமுத்துவின் தலையில் ஓங்கி அடித்தனர். அதில் அவர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார். மேலும் ஆத்திரம் தீராமல் அவர்கள் அந்த பெட்ரோல் பங்கில் உள்ள கண்ணாடி கதவை உடைத்து சேதப்படுத்தினர். சத்தம் கேட்டு கழிவறைக்கு சென்றிருந்த நாராயணன் வெளியே வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தஅண்ணன் காளிமுத்துவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நாராயணனை பார்த்ததும் அந்த 2பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் தப்பி ஓடிய டிரைவர்கள் மாரிமுத்து சரவணகுமார் ஆகியோரை பிடிக்ககோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன்உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில்இருவரும் கே. ராயர் பாளையத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார்அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தரைப்பாலத்தில் இருந்து கீழே குதித்தனர் .இதில் மாரிமுத்து, சரவணகுமார் ஆகியோரின் கை முறிந்தது. 2 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களை சிகிச்சைக்காக கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பெட்ரோல் பங்க் ஊழியர் அடித்துக் கொலை : 2 டிரைவர்கள் கைது – தப்பி ஓடும்போது கீழே விழுந்து கை முறிந்தது..!
