ஆபாச வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல் – உடற்கல்வி ஆசிரியர் கைது..!

மதுரையைச் சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 26) இவர் கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அதே பள்ளியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஆசிரியை ஒருவரும் பணிபுரிந்தார். இதனால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த ஆசிரியை கடந்த ஆண்டு மார்ச் மாதம் காளப்பட்டியில் உள்ள மற்றொரு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக விடுதியில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். சம்பவத்தன்று அஜித்குமார் அந்த ஆசிரியையிடம் தனது பெற்றோர் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருப்பதாகவும், நாம் அங்கு சென்று திருமணத்திற்கு சம்மதம் பெறலாம் என்று கூறியுள்ளார். அதை நம்பிய அந்த ஆசிரியை அவருடன் ஓட்டலுக்கு சென்றார்.அங்கு அஜித் குமாரின் பெற்றோர்கள் இல்லை. இது பற்றி அவர் கேட்டபோது அஜித்குமார் சிறிது நேரத்தில் வந்து விடுவார்கள் என்று கூறியுள்ளார் இதை தொடர்ந்து அவர் ஜூஸ் வாங்கி அதில் மயக்க மருந்து கலந்து ஆசிரியையிடம் கொடுத்துள்ளார். அதை குடித்ததும் ஆசிரியை மயக்கமடைந்தார். அந்த நேரத்தை சாதகமாக பயன்படுத்தி அஜித்குமார் ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்ததும் ஆசிரியையிடம் தனது பெற்றோர்களை மற்றொரு நாள் சந்திக்கலாம் என்று அழைத்துச் சென்றுவிட்டார். அவர் சில நாட்கள் களித்து மீண்டும் அந்த ஆசிரியையை ஓட்டலுக்கு அழைத்துள்ளார். அதற்கு ஆசிரியை மறுப்பு தெரிவித்தார். உடனே அஜித்குமார் தனிமையில் இருந்த போது எடுத்த வீடியோவை காட்டி தன்னுடன் வரவில்லை என்றால் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியிடப் போவதாக கூறி அந்த ஆசிரியையை மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன அந்த ஆசிரியை அவருடன் ஓட்டலுக்குச் சென்றார். அப்போது தனிமையிலிருந்த வீடியோவை காட்டி அஜித்குமார் அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த ஆசிரியை கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அஜித்குமார் தனது பெற்றோருடன் ஆசிரியை தங்கி இருந்த விடுதிக்குச் சென்றார். அவர்கள் அந்த ஆசிரியையிடம் திருமணம் செய்து வைப்பதாக கூறியுள்ளனர் அதன் பிறகு அஜித் குமார் மற்றும் பெற்றோர்கள் அந்த ஆசிரியை அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்தனர் .இதை யடுத்து அந்த ஆசிரியை தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அசோக் குமாரிடம் கூறியுள்ளார் அதற்கு மறுப்பு தெரிவித்த அஜித் குமார் தனது பெற்றோருடன் சேர்ந்து ஆசிரியையை மிரட்டி உள்ளார். மேலும் தனிமையில் இருந்த போது எடுத்த ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க ரூ. 10 லட்சம் தர வேண்டும் என்று கேட்டுஅஜித்குமார் மிரட்டிஉள்ளார். இது குறித்து அந்த ஆசிரியை கோவை மத்திய பகுதி அனைத்துபெண்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பதுருன்னிசா பேகம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து உடற்கல்வி ஆசிரியர் அஜித்குமாரை நேற்று கைது செய்தனர். அஜித்குமார் பயன்படுத்திய செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது..இவர் மீது போக்சோ ,மோசடி, மிரட்டல் உட்பட 4 பிரிவின் கீழ் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..