கோவை லாட்ஜில் பணம் வைத்து சீட்டாட்டம் – வடமாநில தொழிலாளர்கள் 18 பேர் கைது..!

கோவை உக்கடம் டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக உக்கடம் காவல் நிலையத்துக்கு நேற்று மாலை தகவல் வந்தது சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அந்த லாட்ஜில் உள்ள ஒரு அறையில் பணம் வைத்து வீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்தஅஜ்மல் ( 22) இமாம் உசேன் (24) அம்ருல் இஸ்லாம் ( ( 21 )ரசூல் அலி ( 21 ) ஷாஜகான் அலி ( 22) அசுரல் இஸ்லாம் ( 22 ) அஸ்ரூல் இஸ்லாம் ( 22 ) உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ 8,900 பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல அங்குள்ள மற்றொரு லாட்ஜில் பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜுல் இஸ்லாம் (27)அபிபூர் ரகுமான் (38) ரிஜி புல்ஹக் ( 22 )உட்பட 9பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ. 9,060 பறிமுதல் செய்யப்பட்டது..