கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் ஒரு பார் அருகே உள்ள குடோனில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் வீரபாண்டி ஜனார்த்தனன் ( வயது 42) வெள்ளலூர் உதயகுமார் (வயது58) நீலாம்பூர் நாகராஜ் ( வயது 37) சூலூர் ராமகிருஷ்ணன் ( வயது29) கணபதி சித்தன் (வயது 37) நாயக்கன்பாளையம் சரவணன் (வயது 49) வேலாண்டிபாளையம் சதீஷ்குமார் (வயது36) பொள்ளாச்சி மகேந்திரன் (வயது 39) முருகன் ( வயது54) போத்தனூர் சலீம் (வயது 48) ரத்தினபுரி ராஜ்குமார் (வயது 48) செல்வபுரம் ரசாக் (வயது 48) பொள்ளாச்சி உதயகுமார் (வயது 59) சிவானந்தா காலனி ஜான்சன் (வயது 33) உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டனர்..இவர்களிடமிருந்து சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட 312, சீட்டுகளும் ரூ.1,30,450 பணமும் ஒரு கார்,3 இருசக்கர வாகனங்கள், 19 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.