கோவையில் போலி பத்திரம் தயாரித்து சொத்து அபகரிப்பு…

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி .இவர் கோவை மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு சொந்தமான இடத்தை எங்கள் பகுதியை சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்து வைத்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து எனக்குதான் அந்த இடம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.’ ‘இந்த நிலையில் அந்த பெண்எங்களை மிரட்டி வருகிறார். மேலும் கடந்து சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெய்த மழையால் எனது வீடு இடிந்து தரைமட்டமானது. எனவேஇடிந்த இடத்தில் குடிசை அமைக்க பொருட்களுடன் சென்றபோது என்னை அந்த பெண் மிரட்டினார். எனவே சொந்த இடத்தில் வீட்டை சீரமைக்க முடியாத நிலையில் காவல்துறை மற்றும் தாசில்தாரிடம் புகார் அளித்துள்ளேன். மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.