கோவை காளப்பட்டி ரோடு, நேரு நகரில் ஒரு ஆயுர்வேதிக் மையம் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ் குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக இதை நடத்தி வந்த போபாலை சேர்ந்த ரூபின் கான் (வயது 36) கைது செய்யப்பட்டார்.அதன் உரிமையாளர் சிந்து தலைமறைவாகிவிட்டார்.அங்கு சோதனை நடத்தியதில் ஒரு பாக்கெட் காண்டம்,பணம் ரூ.31 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.