கோவை ராமநாதபுரம் ,பாரதி நகர், 6-வது வீதியை சேர்ந்தவர் கவாஸ்கர் ( வயது 31) தனியார் கட்டுமான நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள கூத்தனூரை சேர்ந்த ஜெயதாஸ் ( வயது 28 ) என்பவர் பிளம்பராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் 4-வது மாடியில் உள்ள ஸ்டோர் ரூமில் மின்சார வேலைக்காக வைத்திருந்த 100 கிலோ காப்பர் பிளேட்டுகளை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர் . இது குறித்து கவாஸ்கர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நிறுவனத்தில் பிளம்பராக வேலை பார்த்து வந்த ஜெயதாசை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிலோ காப்பர் பிளேட் மீட்கப்பட்டது..