கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூராம்பாளையத்சேர்ந்தவர் செல்வராஜ், (வயது 49)கூலித் தொழிலாளி. இவர் நேற்று தனது மகன் பிரனேசுடன் (வயது 12) மொபட்டில் கோவை- அன்னூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். குன்னத்தூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாகவந்த தண்ணீர் டேங்கர் லாரி இவர்கள் சென்ற மொபட் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காகஅன்னூர் அரசு மருத்துவமமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் மகன் பிரனேஷ் பரிதாபமாக இறந்தான் .தந்தை செல்வராஜ் படுகாயத்துடன் சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் .இது தொடர்பாக டிரைவர் சியாம் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
லாரி மோதி தந்தையுடன் மொபட்டில் சென்ற மகன் பரிதாப சாவு…
