கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தார். நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலையில் அங்கு தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடியை சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் .சேர்மன் எஸ்.வி. பாலசுப்ரமணியம், அறங்காவலர் டாக்டர். ஆர். வி. ரமணி ஆகியோர் நேரில் சந்தித்து சிறு துளி அமைப்பின் சாதனைகள் குறித்த புத்தகத்தை வழங்கினார்கள். அதைப் படித்துப் பார்த்த பிரதமர் மோடி சிறு துளி அமைப்புக்கு பாராட்டு தெரிவித்தார் .சிறுதுளி அமைப்புக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த உதவிகள் செய்ய வேண்டுமானாலும், எப்போதும் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உடன் இருந்தார் .
சிறு துளி அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!!
