ஜி7 உச்சி மாநாட்டை தொடர்ந்து, பல்வேறு உலக தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
ஜி7 மாநாட்டின் அவுட்ரீச் அமர்வில் பங்கேற்பதற்காகவும், உலகத் தலைவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி, தெற்கு இத்தாலியில் உள்ள அபுலியாவை சென்றடைந்தார். இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் இத்தாலியில் உள்ள பிரிண்டிசி விமான நிலையத்திற்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை அவருக்கு முழுமையான நாள். உலகத் தலைவர்களுடன் நாங்கள் பல இருதரப்பு சந்திப்புகளை திட்டமிட்டுள்ளோம். ஜி7 உச்சிமாநாட்டின் அவுட்ரீச் அமர்விலும் அவர் உரையாற்றுவார்’ எனக்