குஜராத் மாநில சட்டசபை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைப்பெற்றது . மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5ம் தேதி நடக்க உள்ளது. டிசம்பர் 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
இதனையொட்டி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாகன பிரசாரத்தை நேற்று தொடங்கினார். மொத்தம் 16 தொகுதிகளில் பிரதமர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அகமதாபாத்தின் நரோதா காமில் இருந்து பிரச்சார பேரணி தொடங்கியது.
2017 சட்டமன்றத் தேர்தலில் 99 இடங்களைக் கைப்பற்றிய பாஜக, இந்த முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று குஜராத்தில் 7வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் களப்பணியாற்றி வருகிறது.