பிஎம் ஸ்ரீ திட்டம்… ரூ.5000 கோடி இழப்பு… மத்திய அமைச்சர் விளக்கம்..!

த்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா உட்பட சில மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

மேலும், புதிய கல்விக்கொள்கை வாயிலாக அரசுப்பள்ளிகளில் ஹிந்தி திணிக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து வாதம் செய்து, மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இன்று காலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் கல்வியை அரசியலாக்க வேண்டாம். புதிய கல்விக்கொள்கையில் தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் எதிர்கால நலனோடு விளையாட வேண்டாம். மாணவர்களின் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம். இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். அரசியல் நோக்கத்திற்காக அச்சுறுத்தும் வகையில் திமுக அரசு தெரிவிக்க வேண்டாம்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மொழியை உலகெங்கும் பரப்பி வருகிறார். உலகத்தரத்தில் இந்திய மாணவர்களை தயார் செய்ய புதிய கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு மொழியை படிக்கச் வேண்டும் என்பதுதான் அதன் சாராம்சம். இதில் ஹிந்தி திணிப்பு என்பது எந்த மாநிலத்திற்கும் இல்லை” என அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.