கோவை செப்டம்பர் 7 நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பக்கம் உள்ள முத்து குறிச்சி, சத்யா நகரை சேர்ந்தவர் கருப்பண்ணன் (வயது 66) இவர் 2018 – ம் ஆண்டு நடந்த போக்சோ வழக்கில் 6ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார், . இந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி அவருக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதை யடுத்து சிறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சைஅளிக்கப்பட்டு வந்தது .இந்த நிலையில் நேற்று அவர் இறந்தார் .இது குறித்து ஜெய்லர் லதா ,ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.