பேட்டரியால் இயங்கக்கூடிய கூடிய 4 ரோந்து வாகனம்… தொடங்கி வைத்தார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்..!

கோவையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடை நிறுவனம் தனது சி.எஸ்.ஆர். தொகையிலிருந்து 4 பேட்டரி கார்களை கோவை மாநகர காவல் துறைக்கு வழங்கியுள்ளது. இதற்கான சாவியை போலீஸ் கமிஷனரிடம் அந்த நிறுவனத்தார் வழங்கினார்கள். போலீஸ் கமிஷனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்..

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் பேட்டரியால் இயங்கக்கூடிய 4 கார்களை மாநகர காவல் துறைக்கு வழங்கி உள்ளது.. ஒரு காரின் மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும்.மொத்தம் ரூ 60 லட்சம் மதிப்புள்ள 4 கார்களை வழங்கி உள்ளார்கள். இந்த கார் ஒரு முறை பேட்டரி சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர் தூரம் ஓடக் கூடியது.. இந்த கார்களில் வயர்லெஸ் உள்ளிட்ட அனைத்து கருவிகளும் பொருத்தப்பட்டு இருக்கும். இது மாசு கட்டுப்பாட்டை குறைக்க வசதியாக இருக்கும் . இதில் 2 வாகனம் ரோந்து பணிக்கும் , 2 வாகனங்கள் குற்ற தடுப்பு பணிக்கும் பயன்படுத்தப்படும். இனி படிப்படியாக கூடுதல் பாட்டரி கார்கள் பயன்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர்கள் ஸ்டாலின்,சரவணகுமார், சுஹாசினி, ராஜ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்..