கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கந்துவட்டி புகார் தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது கந்துவட்டி வசூலித்தால் அல்லது கந்துவட்டி கொடுக்க கோரி மிரட்டினால் ,கந்துவட்டிக்காக நிலத்தை அடமான வைத்தல் அல்லது விற்பனை செய்த பின் வட்டி வசூலித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம். கந்துவட்டி மிரட்டல் தொடர்பான புகார்களுக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த புகார் குறித்து உடனடி நடவடி எடுக்கப்படும். கந்துவட்டி பிரச்சினைகளை முழுமையாக ஒழிக்க கோவை மாநகர காவல் துறையின் சார்பில் முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கோவை பீளமேட்டில் கந்துவட்டி வசூலித்தவர் கைது செய்யப்பட்டு, காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என அவர் கூறினார்.