கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள வேட்டைக்காரன் புதூர், ஓ எஸ்.பிநகரை சேர்ந்தவர் சபரி சங்கர் ( வயது 36 )இவர் உடுமலை உள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மூலம் ஆனைமலையைச் சேர்ந்த மல்லீஸ்வரி என்ற பெண் அறிமுகமானார். இவர் தனக்கு சங்கர் ராஜா என்பவர் மூலம் அரசு உயர் அதிகாரிகள் பலரை தெரியும் அவர் மூலம் கிராமப்புற வளர்ச்சி பிரிவில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறினார். இதற்காக அவரிடம் ரூ 12 லட்சம் கேட்டார். அதற்கு சபரி சங்கர் தன்னால் ஒரே நேரத்தில் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது. முதலில் ரூ 6 லட்சம் கொடுப்பதாகவும், பின்னர் வேலைக்கான உத்தரவு வந்ததும் ரூ 6 லட்சம் கொடுப்பதாக கூறினார் இதை நம்பி சபரி சங்கர் ரூ 6 லட்சத்தை அவருக்கு கொடுத்தார். கண்ணனும் ,மல்லீஸ்வரியும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தனர்..பின்னர் சிறிது நாள் கழித்து வேலை வாய்ப்புக்கான ஒரு உத்தரவை அவருக்கு அனுப்பி வைத்தனர் அதை அவர் அரசு அலுவலகத்தில் போய் காட்டிய போது அது போலி உத்தரவு என்பது தெரிய வந்தது .இது குறித்து சபரி சங்கர் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டியன் இது தொடர்பாக விசாரணை நடத்தி கண்ணன், மல்லீஸ்வரி ,சங்கர் ராஜா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ .6 லட்சம் மோசடி- பெண் உட்பட 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!
