கோவை மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை- கஞ்சா வைத்திருந்த 3 கைதி சிக்கினர்.!!

கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி ,விசாரணை கைதி, என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .அவர்கள் செல்போன் ,பீடி, சிகரெட் ,கஞ்சா, உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சில கைதிகள் சிறை வளாகத்துக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது . இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் போலீசாருடன், சிறைத்துறை அதிகாரிகள் இணைந்து நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள் . இந்த அதிரடி சோதனையில் போலீசார் மற்றும் சிறை துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது 8-வது பிளாக்கில் உள்ள 10-வது அறை, 29-வதுபிளாக்கில் உள்ள 10 – வது அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதற்கு கைதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசார் நடத்திய சோதனையில் அங்கு கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து கைதிகளான திண்டுக்கல் மாவட்டம் பழனி பாப்பம்பட்டி சேர்ந்த நாகமணி ( வயது 31) கரூர், குளித்தலை சேர்ந்த ஜீவா ( வயது 37 )திருப்பூரை சேர்ந்த சூர்யா (வயது 27) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.