சென்னையில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்..!

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை சென்னை கிண்டியில் போலீசார் சுட்டுப் பிடித்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறை தன்னை தேடுவதை தெரிந்து ஹைகோர் மகாராஜா கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த வாரம் ஆதம்பாக்கத்தை சேர்ந்த நகைக்கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்யும் திட்டத்தோடு வந்த கும்பல் கைது செய்யப்பட்டது.

ஆதம்பாக்கம் நகைக்கடை உரிமையாளரை கொலை செய்யும் திட்டத்தின் பின்னணியில் மகாராஜா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த போலீசார் சென்னை, கிண்டியில் ஹைகோர்ட் மகாராஜாவை சுட்டுப்பிடித்தனர். இதில் காயம் அடைந்த ஹைகோர்ட் மஹாராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.