வால்பாறையில் மக்களுடன் முதல்வர் திட்டமுகாம் நேற்றுடன் நிறைவடைந்தது…

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க கடந்த நான்கு தினங்களாக அட்டகட்டி, வால்பாறை டவுன், சோலையாறு அணை, முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் ஐந்தாவது நாளான நேற்று 12 வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது இம்முகாமில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு பெர்பெற்றி டெரன்ஸ் லியோன், வட்டாட்சியர் வாசுதேவன், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார் மற்றும் பல்வேறு அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர் இம்முகாமில் மகளீர் உரிமைத்தொகை, பட்டா பெயர் மாற்றம், வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய சுமார் 753 மனுக்கள் பெறப்பட்டது மேலும் ஏற்கனவே நடைபெற்ற முகாம் களில் விடுபட்ட மனுதாரர்களிடமிருந்து மனுக்களும் பெறப்பட்ட நிலையில் வால்பாறை பகுதியில் மொத்தம் இதுவரை 4 ஆயிரத்து இருநூற்று நான்கு மனுக்கள் பெறப்பட்டுள்ளது வெகு சிறப்பாக நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் இதுவரை இல்லாத அளவிற்கு மனுதாரர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் தங்களின் மனுக்களை அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது