ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்தவர் விஸ்வன்.இவரது மனைவி மங்கையர்கரசி (வயது 53) இவர் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார் .இந்த நிலையில் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார் .இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் .இந்த நிலையில் சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மங்கையர்கரசி திடீரென்று மாயமாகிவிட்டார்.அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.
அரசு பள்ளிக் கூட ஆசிரியை திடீர் மாயம் …
