ஏ.டி.எம் .சென்டரில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் பணம் மோசடி…

கோவைஒப்பணக்கார வீதியை சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 62) ஆட்டோ டிரைவர்.இவர் நேற்று ஒப்பணக்கார வீதியில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்தடிப்-டாப் ஆசாமி ஒருவர்உங்களுக்கு பணம் எடுக்க உதவி செய்யட்டுமா? என்று கேட்டார் .இதை நம்பி அவரது கார்டை கொடுத்தார். பின் நம்பரையும் கேட்டுக்கொண்டார்.பணம் எடுப்பது போல நடித்து,எந்திரம் பழுதடைந்துள்ளது பிறகு வாருங்கள் என்று கூறினார். இந்த நிலையில்சிராஜுதீன் மொபைல் எண்ணுக்கு ஒரு குறுந் தகவல் வந்தது. அதில் வங்கி கணக்கில் இருந்த 31 ஆயிரத்து 500 எடுத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து சிராஜுதீன் வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமியை தேடி வருகிறார்கள்.