கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக நிறைவு விழா கவுந்தப்பாடி சமுதாயக்கூடத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர். அண்ணாதுரை கலந்து கொண்டார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அறங்காவலர் திரு. கவியரசு முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர். ஆ.மோகனசுந்தரம் தலைமை உரை ஆற்றினார்.
இவ்விழாவில் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் திரு. பாவா. தங்கமணி, கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. வெங்கடேசன், முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் திரு. மதியழகன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. நந்தகோபால், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. ஜெய்சங்கர் ஆகியோர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினர் முனைவர். ஆர் அண்ணாதுரை பேசுகையில் தன்னார்வலர்கள் எண்ணிலடங்கா பணியை செய்து வருகிறீர்கள், உங்களுக்காக மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நிதி திட்டங்களை அளித்துள்ளனர். இந்த திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் செல்ல வேண்டுமென்றால் நீங்கள் அனைவருமே பலவிதமான கலைகளைக் கற்றுக் கொண்டு கல்லூரி அளவிலும், மாவட்ட அளவிலும், பல்கலைக்கழக அளவிலும் பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு. அஜித்குமார் வரவேற்றுப் பேசினார். திரு. கிருஷ்ணகுமார் ஏழு நாள் சிறப்பு முகாமின் அறிக்கையை வாசித்தார்.
செல்வி. காயத்ரி நிகழ்வின் இறுதியில் நன்றி கூறினார். இந்நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்டத்தில் கலந்துகொண்டு ஏழு நாள் தங்கள் பணியினை செம்மையாக செய்த மாணவ தன்னார்வலர்களுக்கு நினைவு பரிசுகளும் பாராட்டுதலும் வழங்கப்பட்டன.