கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஆலங்குட்டை ,கரடு பகுதியில் பொங்கல் பண்டிகை யைஒட்டி சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக குப்பனூர் தனபால் ( வயது 24) சிறுமுகை விமல் குமார் ( வயது 41) இலுப்பநத்தம் பிரகாஷ் (வயது 40) மங்கலக்கரை புதூர் பிரபு (வயது26) குமரன் குன்று சண்முகம் (வயது 25)இதே போல சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாகசூலூர் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாகசூலூர் எஸ் .கே . கே. நகரை சேர்ந்த சந்தோஷ் குமார் ( வயது 24) தமிழ்ச்செல்வன் ( வயது 23) அப்பநாயக்கன்பட்டி அருண்குமார் ( வயது 21)சுரேஷ்குமார் ( வயது 28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 சேவல்களும், பணம் ரூ. 2500 பறிமுதல் செய்யப்பட்டது.