சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிவடைந்தன.
பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2024-ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 காணும் பொங்கல் என தமிழர் திருவிழா கொண்டாட்டம் களைகட்ட இருக்கிறது.
பொங்கல் பண்டிகைகள் ஜனவரி 14 ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதால் ஜனவரி 12-ந் தேதி வெள்ளிக்கிழமையே வழக்கம் போல சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் செல்வர். டிக்கெட் முன்பதிவுகளை வீட்டில் இருந்தபடியேhttps://www.irctc.
இதன்படி இன்று டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 11-ந் தேதி ரயிலில் பயணம் செய்யலாம்; நாளை முன்பதிவு செய்பவர்கள் ஜனவரி 12-ந் தேதி பயணம் செய்யலாம். அதாவது ஜனவரி 11 முதல் ஜனவரி 17 வரை பயணம் செய்ய இன்று முதல் செப்டம்பர் 19-ந் தேதி வரை முன்பதிவு செய்யலாம். இதற்கான விரிவான ஏற்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செய்துள்ளது.
பொங்கல் பண்டிக்கைக்கான டிக்கெட் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கின. ஆனால் தொடங்கிய ஒரு மணிநேரத்திலேயே அதாவது காலை 9 மணிகே தென்மாவட்ட ரயில்களுக்கான முன்பதிவுகள் முடிவடைந்தன.