ஆம்பூர் ஏழை பாட்டி ரூ.2.39 கோடி ஜி.எஸ்.டி வரி பாக்கியாம் … கடிதத்தில் வந்த அதிர்ச்சி தகவல்.!!

தூய்மை பணியளராக மாதம் 9,000 சம்பளம் வாங்கும் மூதாட்டி ஒருவருக்கு 2 கோடிக்கு அதிகமாக ஜி.எஸ்.டி வரி நிலுவையில் உள்ளதாக நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் அந்த குடும்பமே மன உளைச்சலுக்க ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் அனைத்து தொழில்கள் மற்றும் பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அவ்வப்போது புகார்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது வித்தியாசமான ஒரு புகார் வந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து மாதம் ரூ9,000 சம்பளம் பெற்று வரும் ஆம்பூரை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு ரூ2,39,00,000 லட்சம் ஜி.எஸ்.டி வரி பாக்கி உள்ளதாகவும், இந்த தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராணி. அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில், தூய்மை பணியாளராக வேலை செய்து வரும் இவர் மாதம் ரூ9,000 சம்பளம் பெற்று வருகிறார். இந்நிலையில், இவரது பெயரில்திருச்சியில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருவதாகவும், அந்த நிறுவனத்தின் பேரில். 2,39 கோடி ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை பாக்கி உள்ளதாகவும், ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராணி இது குறித்து தனது மகனிடம் கூறியுள்ளர்.

இதனையடுத்து அவரது மகன் தனது அம்மாவை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் மற்றும் ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார். இது குறித்து ராணி கூறுகையில், எனக்க ஒன்றும் தெரியாது. நான் படிப்பறிவு இல்லாதவர். இந்த கடிதம் வந்த ரெண்டு நாளா நான் படாதபாடு பட்டுக்கொண்டு இருக்கிறேன். நாங்கள் மன உளைச்சலில் இருக்கிறேம் என்று கூறியுள்ளார். அவரது மகன் கூறுகையில்,நாங்கள், சொந்த வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் தான் இருக்கிறோம். இந்த கடிதம் வந்ததால் நிம்மதியே இல்லை என்ற கூறியுள்ளார்.