கூடங்குளத்தில் ரஷியா தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகிறது. இதுதவிர 3 மற்றும் 4ஆவது அணுஉலைகள் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளன. 5 மற்றும் 6ஆவது அணு உலைகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முதல் அணுஉலையில் கடந்த 20ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.
2ஆவது அணுஉலையில் மட்டும் ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி நடைபெற்று வந்தது. இதையடுத்து முதல் அணு உலையில் உள்ள தொழில்நுட்பக் கோளாறை சீரமைக்கும் பணியில் அணு உலை விஞ்ஞானிகள், ரஷிய விஞ்ஞானிகள் ஈடுபட்டனா். தொழில்நுட்பக் கோளாறு புதன்கிழமை சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டு அணுஉலைகள் மூலமாக 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருவதாக அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்..