போருக்கு தயாராகிறதா..? சீறி பாயும் ஏவுகணைகள், ரஃபேல் விமானங்கள்… கடுமையான பயிற்சியில் இந்திய ராணுவம்.!!

ந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் உருவாகும் சூழல் நிலவி வருவதால் இந்திய ராணுவம் போர் ஒத்திகை பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்திய அரசு பயங்கரவாதிகளை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த சம்பவத்தால் இந்திய அரசு பாகிஸ்தான் மீது பல்வேறு தடைகள், கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், பதிலுக்கு பாகிஸ்தானும் எதிர் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதனால் இரு நாடுகளுடையே போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இந்திய ராணுவம் போர் பயிற்சியில் ஏற்பட்டு வருகிறது. நேற்று விமானப்படை மேற்கொண்ட பயிற்சியில் சுகோய்-30 ரக விமானங்கள், ரபேல் விமானங்கள் கொண்டு ஒத்திகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல இந்திய கடற்படை போர்கப்பலான ஐஎன்எஸ் சூரத் தரையிலிருந்து வானில் இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. எவுகணைகளை அழிக்கக்கூடிய அமைப்பை இதுக் கொண்டுள்ளது. இந்த சோதனை வீடியோவை கடற்படை வெளியிட்டுள்ளது. இந்த பயிற்சிகள் வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஒன்றுதான் என்று கூறப்படுகிறது, என்றாலும், இதுபோன்ற பரபரப்பான போர் தருணத்தில் பயிற்சி நடப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.