ஊட்டி ; ஊட்டிக்கு ஜனாதிபதி வருவதையொட்டி தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதி போலீஸ் காட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு இம்மாதம், 27ம் தேதி ஊட்டிக்கு வருகிறார்.
29ம் தேதி வரை ஊட்டி ராஜ் பவனில் தங்கி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். 30ம் தேதி ஊட்டி ராஜ்பவனில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்கிறார். அதன்பின், டில்லி செல்கிறார். ஜனாதிபதி வருகையை ஒட்டி கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோரது தலைமையில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று, எஸ்.பி., நிஷா தலைமையில் போலீசார் தீட்டுக்கல் ஹெலிபேட் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். தீட்டுகல்லிலிருந்து ராஜ்பவன் வரை சாலை மார்க்கங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.