கோவை : திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ பயிற்சி கல்லூரியில் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் அரசு முறை பயணமாக நீலகிரிக்கு இன்று வந்தார் . அவர் இன்று டெல்லியில் இருந்து காலை 6 மணிக்கு விமானம் மூலம் புறப்பட்டு 9 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தார் .அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.கவர்னர் பி . என். ரவி,மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் ,மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி .செந்தில் குமார்,மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்,மற்றும் பலர் வரவேற்றனர்.அங்கிருந்து .இன்று காலை 9 – 15 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு ராஜ்பவனில் தங்கினார்.நாளை ( வியாழக்கிழமை) கார் மூலம் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகிறார்.வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ஜனாதிபதி திரவுபதிக்கு ராணுவமரியாதை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு போரில் உயிரிழந்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைக்கிறார் .இதை தொடர்ந்து நாளை மறுநாள் ( வெள்ளிக்கிழமை) ஊட்டி ராஜ் பவனில் நீலகிரி பழங்குடி மக்கள் மற்றும் படுகர் இன மக்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது. 30 -தேதி காலை ஹெலிகாப்டர் மூலம் கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார் .பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் ஜனாதிபதி அங்குள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் டெல்லி திரும்புகிறார். ஜனாதிபதி வருகையை யொட்டி கோவை – நீலகிரி மாவட்ட முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது…
ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கோவை வருகை… விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.!!
