சிபிஐ அதிகாரி போல் நடித்து ரூ.50 லட்சம் பண மோசடியில் ஈடுபட்ட கேடி கைது..!

தாம்பரம் : தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் அவர்களை சந்தித்த சுரேஷ்குமார் வயது 52. அப்பா பெயர் முத்துப்பிள்ளை செந்தில் முருகன் நகர் இரும்புலியூர் சென்னை 44720754055 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்ட நபர் டெலிகாம் ரே குலாரிட்டி அத்தாரிட்டி ஆப் இந்தியா ( ட்றாய் ) பேசுவதாக கூறி நான் பயன்படுத்தி வந்த தொலைபேசி எண் மணி லேண்டரிங் பிசினஸ் குற்றத்திற்காக மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து இருப்பதாகவும் இவ்வழக்கில் தான் சுரேஷ்குமாரை ஸ்கைப் என்ற செயலி மூலம் விசாரணை செய்ய வேண்டும் என்றும் மேலும் பண மோசடி வழக்கில் கைதான நபர்களுடன் மனுதாரர் சுரேஷ்குமாருக்கு தொடர்பு இருப்பதாகவும் விசாரணைக்கு சுரேஷ்குமாரின் வங்கி கணக்கில் இருந்து குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூபாய் 50 லட்சம் அனுப்புமாறும் சுரேஷ்குமாரின் பண பரிவர்த்தனைகள் தணிக்கை செய்துவிட்டு மீண்டும் சுரேஷ்குமாரின் வங்கி கணக்கிற்கு திருப்பி செலுத்தப்படும் எனக் கூறியதை நம்பி சுரேஷ்குமார் பணத்தை அனுப்பியதாகவும் இதுவரை சுரேஷ்குமார் செலுத்திய தொகை சுரேஷ்குமாருக்கு திரும்பி வரவில்லை என்றும் சுரேஷ்குமார் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து ஏமாற்றியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கொடுத்த புகாரின் பேரில் தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது . தீவிர புலன் விசாரணையில் சுரேஷ்குமார் இடமிருந்து ஏமாற்றப்பட்ட ரூபாய் 50 லட்சம் மோசடி ஆளர்களின் விவரங்கள் மற்றும் கேடிகளின் வங்கிக் கணக்குகள் கே ஒய்சி ஏ சி சி அக்கவுண்ட் ஓபனிங் ஃபார்ம் மற்றும் பண பரிவர்த்தனை ஆகியவை சேகரிக்கப்பட்டு விசாரித்ததில் மோசடி செய்யப்பட்ட பணமானது கேடிகளின் வங்கி கணக்குகள் பணம் பெறப்பட்டது தெரிய வந்துள்ளது. மேற்படி வழக்கு சம்பந்தமாக ஏற்கனவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய தாம்பரம் போலீஸ் கமிஷனர் முனைவர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் மதிய குற்ற பிரிவு துணை ஆணையாளர் மற்றும் சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையர் அவர்களின் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சசிகுமார் அவர்களின் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது அவர்கள் கேரள மாநிலம் சென்று குற்றவாளி நம்பர் ஒன் கேடி முகமது சாகித்து வயது 29 தகப்பனார் பெயர் சுலைமான் என்பவன் அதிரடியாக கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து 2 செல்போன்கள் மற்றும் ஹூண்டாய் கிரேட்டா கார் பதிவு எண் kl 10 பிஜே2332 மற்றும் 47 பல்வேறு வங்கி களின் ஏடிஎம் கார்டுகள் ஆகியவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளியை தாம்பரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டான். சிபிஐ அதிகாரி போல் ஆள் மாறாட்ட மோசடி fedex சிபிஐ போலீஸ் ஷேர் மார்க்கெட் ரீடிங் பகுதி நேர வேலை மோசடி மற்றும் telegram டாஸ்க் ஸ்கேம் தொடர்பான முதலீடுகள்  குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் இது சம்பந்தமாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 அல்லது நேஷனல் சைபர் கிரைம் ரிப்போட்டிங் போர்டல் www.cyber crime. Gov. In என்ற வெப்சைட் மூலம் புகார் அளிக்கலாம் அல்லது சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறு பொதுமக்களை தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் கேட்டுக் கொiண்டுள்ளார்..