நகை வாங்குவது போல் நடித்து தங்கம் அபேஸ்..!

கோவை தெற்கு உக்கடம் அல்- அமீன் காலனியை சேர்ந்தவர் அப்துல் ஹக்கீம். இவரது மகன் அஜ்மல் .இவர் பெரிய கடை வீதி உப்பு கிணறு சந்தில் நகைக்கடை நடத்தி வருகிறார் .நேற்று மாலையில் இவரது கடைக்கு ஒருவர் நகை வாங்குவது போல் சென்றார்.சில நகைகளை பார்த்தார். சிறிது நேரம் கழித்து தனக்கு எந்த நகையையும் பிடிக்கவில்லை என்று அந்த இடத்தை விட்டு நழுவி விட்டார். அவர் சென்ற பிறகு சரி பார்த்தபோது 15 கிராம் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இது தொடர்பாக அஜ்மல் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்.ஐ. விக்னேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.